2024யில் தொங்கு பாராளுமன்றம் வந்தால் ஸ்டாலின் பிரதமராக முடியுமா?

Prime Minister India 2024

2024யில் மு.க.ஸ்டாலின் பிரதமராக முடியுமா என்று சொல்வதற்கு முன், மு.க.ஸ்டாலின் பிரதமராக வர சம்மதிப்பாரா என்று பார்ப்போம். 1990-களில் ஸ்டாலினின் தந்தை கலைஞர் கருணாநிதி இந்தியாவின் பிரதமராக சில வாய்ப்புகள் இருந்தது, ஆனால் அவர் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை மற்றும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒருமுறை ஏன் பிரதமர் ஆவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று செய்தியாளர் அவரிடம் கேட்டபோது, ​​கருணாநிதி அவர்களிடம் “எனது உயரம் தெரியும்” என்று கூறினார். குறைந்தபட்சம் ஒரு பதவிக் காலத்தையாவது முடிக்க … Read more

உப்பில்லாக் குழம்பான உணர்ச்சிப்பிழம்பு – வைகோ

Vaiko Tamilnadu

உணர்ச்சிப் பிழம்பாய், பல எழுச்சிப் பேருரைகளை நிகழ்த்தி, எண்ணற்ற இளைஞர்களைத் தன்பக்கம் ஈர்த்துவைத்திருந்த தமிழத்தின் அரசியல் தலைவர்களில் ஒருவர்தான் வைகோ. திருநெல்வேலி, கலிங்கபட்டியில் பிறந்த இவர், பேரறிஞர் அண்ணா முன்னிலையில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தவர்தான் வைகோ அவர்கள். மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்தவர். தன் அரசியல் வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தவர். இலங்கைக்குப் போய் பிரபாகரனையும் சந்தித்தவர். … Read more

அது வேற வாய். இது நாறவாய் – சிரிப்பூட்டும் சீமான்!

seeman-who-changes-opinions

’அது போன மாசம், இது இந்த மாசம்’’ எனும் வின்னர் படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதே போன்ற நகைச்சுவையை அரசியல் களத்தில் நிகழ்த்திக் கொண்டிருப்பவர்தான். முன்னுக்குப் பின் முரணாக தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டு களமாடும் அண்ணனும், அவர்தம் தம்பிகளும் கலவர பூமியை காமெடியாக்கி அனைவருக்கும் ஆசுவாசத்தை ஏற்படுத்துபவர்கள்  என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தங்கம், வெள்ளி விலை நிலவரம் எப்போதும் ஒரே நிலையில் இருக்காது. சொக்கத்தங்கம் சீமானின் கருத்துக்களின் … Read more

மம்தா பானர்ஜியின் மஹாராஷ்டிரா பயணம் – புதிய கூட்டணிக்கான முன்னோட்டமா?

mamata maharashtra visit

மேற்கு வங்கத்தின் முதல்வரும் பாரதீய ஜனதா கட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவரும் திரிணமுல் காங்கிரசின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த வாரம் 3 நாட்கள் பயணமாக மகாராஷ்டிரா சென்றிருந்தார் அல்லவா? அவரது இந்தப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பல அதிர்வுகளைக் கிளப்பியிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு புதிய அணி அமைப்பதற்கான முன்னோட்டமாகவே அனைவராலும் இது பார்க்கப்படுகிறது. மஹாராஷ்டிரா சென்ற மம்தா பானர்ஜி அங்கு  சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே, சஞ்சய் ராவத், … Read more

தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன்க்கு இரா.கேப்டன் தமிழ்செல்வன் கோரிக்கை.

மும்பையில் பத்தாவது வகுப்பு தமிழ்வழி தனித்தேர்வர்களாக தேர்வு எழுதவிருந்த மாணவர்களின் தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையனுடன் சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்செல்வன் பேசினார். தமிழ்நாட்டில் இவ்வாண்டு பத்தாம் வகுப்பு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு கல்வித்துறை அறிவித்தது. ஆனால் வெளிமாநிலங்களில் தேர்வு எழுதவிருந்த பத்தாம் வகுப்பு  தமிழ்வழிக்கல்வி  மாணவர்கள் பற்றி அறிவிப்பு ஏதும் வரவில்லை.  இதனால் மும்பை மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த மன உழைச்சலுக்குள்ளாயினர். தமிழக மாணவர்களைப்போல் மும்பை மாணவர்களும்  தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு … Read more