தளபதி 68-ல் பள்ளி மாணவராக ஜோசப் விஜய்?

தளபதி ஜோசப் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் “தளபதி 68” படம் குறித்த புதிய அப்டேட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் ஜோசப் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. தற்போது அந்த இரட்டை வேடங்களில் ஒன்று பள்ளி மாணவராக இருப்பதாக கூறப்படுகிறது.

ஜோசப் விஜய் தனது 31 வருட சினிமா வாழ்க்கையில் இதுவரை ஸ்கூல் பையன் லுக்கில் நடிக்கவில்லை. எனவே இந்த தோற்றம் ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத ஒரு அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CINEMA NEWS
ரஜினி ரஜினி! 1979-ல் சிவாஜி கணேசன் படத்தில் தூள் கிளப்பிய பாடல்!

இந்த படம் ஹாலிவுட் படமான “லூப்பர்” படத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்க, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, வைபவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி ஆகியோர் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த படம் 2024-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment