திருப்பூர் ஜவுளித் தொழில் 37ஆண்டுகளில் 2000 மடங்கு வளர்ச்சி..! நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டம்

[ad_1]

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும் போது, ”இரண்டு நாட்களாக நமது மத்திய அமைச்சர் பல்வேறு தொழில் துறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து உலக நாடுகள் வியந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு உலக நாடுகள் ஆச்சரியப்படுகின்றன. இந்த அரசாங்கம் சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் ஆகிய மூன்று தாரக மந்திரங்களைக் கருத்தில் கொண் செயல்பட்டு வருகிறது. நல்ல அரசாங்கம் என்பது, ஏழைகளுக்கு சேவை செய்வது என்பது ஆகும்.

மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் ஏராளமான நலத் திட்டங்களை கொண்டுவந்துள்ளது. பிரதமர் இந்தியாவை ஆற்றல் மிக்க நாடாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். அண்மையில் ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அதோடு ஏற்றுமதிக்கான செலவு பெருமளவு குறையும்.

அதோபோல, பிரதமரின் கதிசக்தி போன்ற புரட்சிகர திட்டத்தின் வாயிலாக நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வலுப்பெறும். பல அடுக்கு ஏற்றுமதி பூங்கா அமைத்தல், கன்டெய்னர் உற்பத்தியில் கவனம் செலுத்துதல் போன்றவற்றால் நாட்டிலுள்ள அனைத்து திசைகளும் ஒரு புள்ளியில் இணைக்கப்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது” என்றார் அமைச்சர் முருகன்.

திருப்பூர் தொழில்முனைவோர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் நிறைவேற்றினால், இன்னும் பல ஆயிரம் கோடிகள் ஏற்றுமதி மதிப்பு அதிகரிக்கும் என்பதை சொல்லவேண்டிய தேவையே இல்லை!

நன்றி

Leave a Comment